தமிழகம் Covid-19

தலைநகரில் தலைவிரித்தாடும் கொரோனா..! இறப்பு எண்ணிக்கை 1000 ஐ கடந்தால் மக்கள் அச்சம்..!

Summary:

Chennai corona death rate crossed 1000

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்னிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.

உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரை 1 லட்சத்தை கடந்துள்ளது.

குறிப்பாக சென்னையில் கொரோனாவின் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தாலும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது மக்கள் மத்தியில் சற்று தைரியத்தை கொடுத்தது.

ஆனால், தற்போது கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து இதுவரை சென்னையில் மட்டும் 1000 பேருக்கு மேல் கொரோனாவால் உயிரிழந்திருப்பது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இதுவரை 1022 பேர் கோரோனோவால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement