சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது பரிதாபம்.. கண்டைனர் விழுந்து உடல் நசுங்கி பலியான துயரம்.!

சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது பரிதாபம்.. கண்டைனர் விழுந்து உடல் நசுங்கி பலியான துயரம்.!


chennai-container-accident-issue

சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர்களின் மீது கன்டெய்னர் பெட்டகம் விழுந்ததால், உடல் நசுங்கி உயிரிழந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.

சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் சீனிவாசன். இவர் சென்னை அண்ணாநகரில் உள்ள புதிய கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.  இதனைத் தொடர்ந்து தனது தங்கை நிவேதாவுடன் மணலி புதுநகர் பகுதி அருகாமையில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார்.

அப்போது வீடு திரும்பிய நிலையில், மணலி விரைவுச்சாலை அருகாமையில் அதிவேகமாக எதிரெதிரே வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. 

chennaiஇதில் லாரியில் இருந்த கண்டெய்னர் பெட்டகம் தூக்கி வீசப்பட்டதில், சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது விழுந்துள்ளது. இந்த கோர விபத்தில் இருவரும் கண்டெய்னர் பெட்டகத்தின் அடியில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். பின் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து தலைமறைவான லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.