சென்னையில் இனிமேல் இதெல்லாம் பண்ணக்கூடாது.! மீறினால் தண்டனை.! மக்களே உஷார்.!

சென்னையில் இனிமேல் இதெல்லாம் பண்ணக்கூடாது.! மீறினால் தண்டனை.! மக்களே உஷார்.!


chennai-commissioner-new-order-for-corona

பொது இடங்களில் 5-க்கும் மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது என மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தனிமைப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளி பின்பற்றுதலை வலியுறுத்தி தொற்று நோய் சட்டம் மற்றும் 144 (4) குற்றவியல் நடைமுறைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, பொது இடங்களில் 5-க்கும் மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. ஏற்கெனவே, இந்த தடை உத்தரவு அக்டோபர் 31-ம்தேதிவரை அமலில் இருந்தது. மத்திய உள்துறை அமைச்சகம் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக, தடை உத்தரவை மேலும் ஒரு மாதம் நீட்டிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, பொது இடங்களில் 5-க்கும் மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கு  நவம்பர் 30-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை இந்த தடை உத்தரவு நீடிக்கப்படுகிறது.

commisioner

இந்த தடையை மீறுபவர்கள் இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர். அதேபோல் சென்னை மாநகர காவல் எல்லையில் நவம்பர் 1-ம் தேதிமுதல் 15-ம் தேதிவரை பொதுஇடங்கள், போக்குவரத்து நெரிசல்மிக்க பகுதிகளில் போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், மனித சங்கிலி, கூட்டம், பேரணி ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.