வசூலை வாரி அள்ளும் நடிகர் தனுஷின் தேரே இஷ்க் மெய்ன்.! 10 நாட்களில் மட்டுமே வசூல் எவ்வளவு தெரியுமா??
"நந்தனம் தான் கெத்து" மாநகர பேருந்தை இடைமறித்து கல்லூரி மாணவர்கள் சர்ச்சை வீடியோ...!
அரசு பேருந்தை இடைமறித்து மாணவர்கள் மீண்டும் தங்களின் அட்டூழியத்தை ஆரம்பித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள பச்சையப்பாஸ், மாநில கல்லூரி மாணவர்களுக்கு இடையே அவ்வப்போது மோதல் தொடர்பான சம்பவங்கள் நடப்பது உண்டு. எந்த கல்லூரி மாணவர்கள் பொதுமக்களுக்கு இடையூறு செய்து கெத்து காண்பிப்பதில் மேலோங்கியவர் என இருதரப்பும் மோதிக்கொள்ளும்.
சில சமயங்களில் இவர்கள் கெத்து காண்பிக்கிறோம் என்ற பெயரில் சென்னை மாநகர பேருந்துகளில் அடாவடி செய்து, அதனை இடைமறித்து நிறுத்தி வீடியோ வெளியிடுவது வழக்கமாக நடந்து வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் 10 க்கும் மேற்பட்ட மாணவர்கள் குழு சென்னை மாநகர அரசு பேருந்தை இடைமறித்து வீடியோ வெளியிட்டது.

அதாவது, நந்தனம் தான் கெத்து என்ற முழக்கமெழுப்பி வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிடப்பட்டது. சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டை எஸ்.ஐ.இ.டி மகளிர் கல்லூரி முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்த வீடியோ வைரலாகியுள்ள நிலையில், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என தெரியவருகிறது.
காவல் துறையினரின் கண்டிப்புக்கு பயந்து சில மாதங்கள் வரை இவ்வாறான செயலில் ஈடுபடுவோர் அமைதியாக இருந்தாலும், மீண்டும் தங்களின் அட்டூழியத்தை ஆரம்பித்து வருகின்றனர். இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.