அடேயப்பா.. முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து நேற்று ஒரேநாளில் ரூ.15 இலட்சம் அபராதம் வசூல்.!

அடேயப்பா.. முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து நேற்று ஒரேநாளில் ரூ.15 இலட்சம் அபராதம் வசூல்.!


Chennai City Facemask Offence Collection One Day Rs 15 Lakh

தமிழ்நாட்டில் பரவ தொடங்கியுள்ள ஒமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்த, ஜன. 6 ஆம் தேதி முதல் முழு இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கில் அத்தியாவசிய பணிகளை தவிர்த்து, அனாவசியமாக சுற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் காவல் துறையினர் எச்சரித்துள்ளனர். 

சென்னையில் இரவு நேர ஊரடங்கில் 10 ஆயிரம் காவல் துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், சுமார் 312 க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்புகள் அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு நேர ஊரடங்கை மீறி வலம்வந்தவர்களின் 707 இருசக்கர வாகனம், 59 ஆட்டோ போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Corona virus

மேலும், மதுபோதையில் வாகனம் இயக்கியது தொடர்பாக 15 இருசக்கர ஆவாகனம், 8 ஆட்டோ என மொத்தமாக 30 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் அலட்சியத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு சிறப்பு குழுவினர், முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 வீதம் அபராதம் விதித்து வருகின்றனர். சென்னையில் நேற்று ஒரேநாளில் 7 ஆயிரத்து 616 பேர் முகக்கவசம் அணியவில்லை என்று குற்றம் சாட்டி, அவர்களிடம் இருந்து ரூ.15 இலட்சத்து 23 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.