புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
மதுபோதையில், அன்பான தந்தையை குத்திக்கொன்ற மகன்.. அதிரவைக்கும் பரபரப்பு சம்பவம்.!
சென்னையில் உள்ள சூளைமேடு, வீரபாண்டி நகரில் வசித்து வருபவர் செல்வம். இவர் செங்குன்றத்தில் கார் லைனிங் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு பிரகாஷ் (வயது 24), நித்தியானந்தம் (வயது 21) என்ற மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து, தந்தையுடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார்கள்.
இந்நிலையில், நித்தியானந்தத்திற்கு மதுபானம் அருந்தும் பழக்கம் இருந்ததால், தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். நேற்றும் நித்தியானந்தம் போதையில் தகராறு செய்ய, செல்வம் மகனை கண்டித்து இருக்கிறார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த நித்தியானந்தம் கத்தியை எடுத்து வந்து தந்தையின் வயிற்றில் குத்தி தப்பி சென்றுள்ளார். இரத்த வெள்ளத்தில் கிடந்த செல்வதை மீட்ட உறவினர்கள், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சூளைமேடு காவல் துறையினர், தலைமறைவான நித்தியானந்தத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.