BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
பெயிண்டிங் பணியில் சோகம்; கயிறில் தொங்கியபடி வேலைபார்த்த நபர், கயிறு அறுந்து பரிதாபமாக பலி.!
சென்னையில் உள்ள சேத்துப்பட்டு தனியார் அடுக்குமாடி கட்டிடத்தில் வர்ணம் பூசும் வேலை நடைபெற்று வருகிறது. இன்று காலை வழக்கம்போல பணியாட்கள் வேலையை கவனித்து வந்தனர்.
இன்று வேலைக்கு வந்திருந்த ஐயப்பன் என்பவர், 4வது மாடியில் வெளிப்புறம் கயிறு கட்டி வர்ணம் பூசும் வேலையில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், ஐயப்பனின் உடலில் இருந்த கயிறு திடீரென அறுந்துபோனதால், அவர் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சேத்துப்பட்டு காவல் துறையினர், ஐயப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.