கடத்தல் கஞ்சாவை காலி செய்த எலிகள்; குற்றவாளிகளை விடுதலை செய்த நீதிமன்றம்..!Chennai Cannabis Case Judgement 

 

கடந்த 2020 ஆம் ஆண்டு சென்னை மாடக்குப்பம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேரை அதிகாரிகள் கைது செய்து, 20 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். 

இந்த விஷயம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற போதைப் பொருள் தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மூன்று ஆண்டுகளாக விசாரணை நடைபெற்ற வந்த நிலையில், விசாரணையின் போது காவல்துறையினர் குற்றப்பத்திரிக்கையில் 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்தனர். 

chennai

ஆனால், இறுதி விசாரணையின்போது 9 கிலோ சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 11 கிலோ கஞ்சா எலிகளால் தின்னப்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த நீதிபதிகள், குற்றச்சாட்டை நிரூபணம் செய்ய முடியவில்லை என்பதால், கஞ்சா வியாபாரிகளை விடுதலை செய்து தீர்ப்பளித்தனர்.