கொதிக்க கொதிக்க இருந்த வெந்நீர் வாளி..! தவறி விழுந்த 2 வயது குழந்தை..! தாயின் அலட்சியத்தால் கதறும் குடும்பம்..!

கொதிக்க கொதிக்க இருந்த வெந்நீர் வாளி..! தவறி விழுந்த 2 வயது குழந்தை..! தாயின் அலட்சியத்தால் கதறும் குடும்பம்..!


Chennai baby fall into hot water and died

சென்னை திருவெற்றியூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி ஜனனி. இவருக்கு திருமணம் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆன நிலையில் ஷிவாணிஸ்ரீ என்ற இரண்டு வயது குழந்தை ஓன்று உள்ளது. இந்நிலையில் மெக்கானிக் கடை நடத்திவரும் மணிகண்டன் தனது வேலைக்காக வெளியே சென்றுள்ளார்.

வீட்டில் இருந்த அவரது மனைவி ஜனனி, குழந்தையை குளிக்க வைப்பதற்காக சுடுதண்ணி போட்டுள்ளார். கொதிக்க கொதிக்க இருந்த சுடுதண்ணீர் வாலியை வெளியே கொண்டுவைத்துவிட்டு, கிச்சனில் மீண்டும் வேலைபார்ப்பதற்க சென்றுள்ளார் ஜனனி.

accident

இந்த சமயத்தில், வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த ஷிவாணிஸ்ரீ, எதிர்பாராத விதமாக சுடுதண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்துள்ளார். இதில், சுடுதண்ணீர் முழுவதும் ஷிவானி மீது பட, குழந்தை அலறி துடித்துள்ளது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த ஜனனி, குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த குழந்தை, சென்னை கீழ்பாக்கம் அரசு மதுவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது. அங்கு தீவிர சிகிச்சை நடந்துவந்த நிலையில், குழந்தை சிகிசிச்சை பலனின்றி பரிதமாக உயிர் இழந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.