அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
போதையில் ஆட்டமாடி, அதிகாரிகளிடம் கைகளை முறித்துக்கொண்டு சரண்டர் ஆன புள்ளிங்கோஸ்..!
பட்டா கத்தியுடன் மக்களை பதறவைத்த கும்பல் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டது.
சென்னையில் உள்ள கொடுங்கையூர், மீனாம்பாள் சந்திப்பில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது, தலா இரண்டு இருசக்கர வாகனத்தில் 6 பேர் பயணம் செய்தனர்.
அவர்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியபோது ஒரு வாகனத்தில் வந்தவர்கள் சிக்கிக்கொண்டனர். மற்றொரு வாகனத்தில் வந்தவர்கள் தப்பி செல்வதாக நினைத்து, அவர்கள் வைத்திருந்த கத்தியை கீழே தவறவிட்டு பயணித்தனர்.

சிறிது தூரத்தில் அவர்களும் விபத்தில் சிக்கி காவல் துறையினரிடம் சிக்கிக்கொண்டனர். இந்த விபத்தில் 2 குற்றவாளிகளுக்கு கைகளில் எலும்பு முறிய, அவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகளை அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். அவர்களுக்கு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.
விசாரணையில், 6 பேரும் கஞ்சா மற்றும் மதுபோதையில் பட்டா கத்தியுடன் வீதி வீதியாக சென்று ரகளையில் ஈடுபட்ட நிலையில், இறுதியில் காவல் துறையினரிடம் சிக்கிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.