கொலைக்கு ஸ்கெட்ச் போட்டவரை ஸ்கெட்ச் போட்ட கொன்று பழிக்குப்பழிவாங்கிய உறவினர்கள்.. நடுரோட்டில் நடந்த கொலையின் பகீர் பின்னணி.!

கொலைக்கு ஸ்கெட்ச் போட்டவரை ஸ்கெட்ச் போட்ட கொன்று பழிக்குப்பழிவாங்கிய உறவினர்கள்.. நடுரோட்டில் நடந்த கொலையின் பகீர் பின்னணி.!


Chennai Arumbakkam man Killed

 

தனது உறவினரை ஸ்கெட்ச் போட்டு கொலை செய்த நபரை, அவரின் உறவினர்கள் ஸ்கெட்ச் போட்டு நடுரோட்டில் வெட்டி கொலை செய்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னையில் உள்ள அரும்பாக்கம் ஆசாத் நகரில் வசித்து வருபவர் நாகூர் கனி (வயது 32). இவரின் மனைவி கத்திஜா. தம்பதிகளுக்கு முகமது அகில், முகமது ஆதில் என்ற 2 குழந்தைகள் இருக்கின்றனர். அமைந்தகரை, அயனாவரம் உட்பட பல காவல் நிலையத்தில் நாகூர் கனி மீது சிறிய அளவிலான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இவர் கடந்த 2 ஆண்டுகளாக பிரியாணி கடை நடத்தி வந்த நிலையில், கடந்த நவ. 2ம் தேதி பிரியாணி கடை அருகே மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், வியாசர்பாடியை சேர்ந்த கிரண்குமார் என்ற நபரை நேற்று இரவில் கைது செய்தனர். அவனிடம் நடந்த விசாரணையில் பழிக்கு பழியாக கொலை நடந்தது அம்பலமானது. அதாவது, கடந்த ஜூலையில் எர்ணாவூரை சேர்ந்த ஜமாத் உறுப்பினர் உமர் பாஷா மர்ம நபர்களால் வீட்டிற்கு திரும்பும்போது வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு பழிவாங்கவே நாகூர் கனி கொலை செய்யப்பட்டுள்ளார். 

chennai

உமரின் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் 7 பேர் சிறையில் உள்ள நிலையில், உமரை கொலை செய்ய நாகூர் கனியே ஸ்கெட்ச் போட்டு கொடுத்துள்ளார். இதனால் உமரின் உறவினர்கள் ஜீலான் மற்றும் ஹுசைன் சேர்ந்து ஸ்கெட்ச் போட்டு நாகூர் கனியை கொலை செய்துள்ளனர். இதில், நாகூர் கனி - கூலிப்படை கும்பலின் தலைவன் அரும்பாக்கம் ராதா ஆகியோர் கூட்டாளிகளும் ஆவார்கள். 

இதில், கடந்த சில ஆண்டுகளாகவே உமர் பாஷா - நாகூர் கனி இடையே சுமூகமான உறவுகள் இல்லை. இதனால் இருவரும் எதிரெதி அணியாக உருவெடுத்து இருக்கின்றனர். இவர்களுக்குள் ஏற்பட்ட போட்டி, பொறாமையால் கொலை நடந்துள்ளது. இவ்வழக்கில் தொடர்புடையவர்களை அதிகாரிகள் தேடி வந்த நிலையில், ஹுசைனை தவிர்த்து உள்ள 4 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.