கல்லூரி மாணவியை காதலில் வீழ்த்தி, கடத்தி கற்பழித்த இளைஞர்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.!Chennai Anna Nagar College Student Minor Girl Love Trap Abused

சென்னையில் உள்ள அண்ணாநகரில் வசித்து வருபவர் சபிதா பேகம்  (வயது 39) பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 26 ஆம் தேதி அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சபிதா புகார் அளித்தார். 

இந்த புகாரில், எனக்கு 17 வயது மகள் இருக்கிறார். இவர் அண்ணாநகரில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் முதல் வருடம் பயின்று வருகிறார். கடந்த 26 ஆம் தேதியன்று வழக்கம்போல கல்லூரிக்கு செல்வதாக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். 

அன்று மாலை அவர் வீட்டிற்கு வரவில்லை. எனக்கு தெரிந்த இடங்கள் மற்றும் அவரின் தோழிகளிடம் விசாரித்தும் அவர் குறித்த டக்வல கிடைக்கவில்லை. எனது மகளை கண்டறிந்து தரவேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 

chennai

இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், அம்பத்தூரில் செயல்பட்டு வரும் கோழிக்கடையில் பணியாற்றி வந்த ஓட்டேரியை சேர்ந்த முகமது அப்ரார் (வயது 19) என்பவர் கல்லூரி மாணவியிடம் பழகி வந்தது தெரியவந்தது. 

மேலும், கல்லூரி மாணவியிடம் காதலிப்பதாக நடித்து, அவரை திருமணம் செய்துகொள்வதாக திருவள்ளூருக்கு கடத்தி சென்றதும் உறுதியானது. திருவள்ளூர் சென்ற காவல் துறையினர் மாணவியை மீட்டு, முகம்மதை கைது செய்தனர். 

அப்போது நடந்த விசாரணையில் சிறுமி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு, பலாத்காரம் செய்யப்பட்டதும் உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், முகம்மதை கைது செய்து சிறையில் அடைத்தனர்.