தமிழகம்

வெளுத்து வாங்கப்போகும் மிக கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

Summary:

Chennai and Tamilnadu rain updates

தமிழகம் மற்றும் புதுசேரியில் கடந்த சில வாரங்களாக மிதமானது முதல் கனமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய்ய இயக்குனர் புவியரசன் அளித்துள்ள பேட்டியில் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

குறிப்பாக வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருச்சி, தஞ்சாவூர் போன்ற முக்கிய மாவட்டங்கள் உட்பட 16 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழகதின் கடலோர பகுதி மற்றும் மாலத்தீவு பகுதிகளில் கடுமையான சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் நாளையும் நாளை மறுநாளும் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.


Advertisement