வார இறுதியை முன்னிட்டு சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் - தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவிப்பு.!

சென்னை உட்பட பெரு நகரங்களில் வேலைபார்க்கும் பலரும், வார இறுதிகளில் சொந்த ஊர் சென்று வருவது வழக்கம். நாளை வெள்ளிக்கிழமை (ஜூலை 21) இரவு பலரும் தங்களின் பயணத்தை தொடருவார்கள்.
இந்நிலையில், சென்னை உட்பட பெரு நகரங்களில் இருந்து சொந்த ஊர் பயணிக்கும் மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னையில் இருந்து 300 சிறப்பு பேருந்துகளும், கோவை, மதுரை மற்றும் நெல்லை ஆகிய நகரங்களில் இருந்து 300 பேருந்துகளும் இயக்கப்படும் என அறிவிப்பட்டுள்ளது