தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
படுக்கையில் இருந்த தந்தையை அடித்தே கொன்ற மகன்.. மதுபோதையில் மகன் வெறிச்செயல்..! பாடியில் பரிதாபம்.!!
மதுபோதையில் தாயிடம் சண்டையிட்ட மகனை தந்தை கண்டிக்க, ஆத்திரத்தில் தந்தையை மகன் படுகொலை செய்த துயரம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள அம்பத்தூர் பாடி, அவ்வை நகர் பெரியார் தெருவில் வசித்து வருபவர் சுந்தரமூர்த்தி (வயது 80). இவரின் மகன் சங்கர் (வயது 34). இவர் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். சங்கரின் மனைவி விஜயலட்சுமி (வயது 30). சங்கர் வேலைக்கு செல்லாமல் மதுபோதையில் சுற்றுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இதனால் தம்பதியடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கடந்த வாரம் விஜயலட்சுமி தனது சொந்த ஊரான விருத்தாசலத்தில் உள்ள பெற்றோரின் வீட்டிற்கு சென்றுள்ளார். சங்கரின் தந்தை சுந்தரமூர்த்திக்கு இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் பிரச்சனை இருந்துள்ளது. படுத்த படுக்கையாக அவர் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று சங்கர் மதுபோதையில் வீட்டிற்கு வந்து தாய் ராணியிடம் தகராறு செய்துள்ளார்.
இதனைகவனித்த சுந்தரமூர்த்தி மகனை தட்டிகேட்கவே, ஆத்திரமடைந்த சங்கர் படுக்கையில் இருந்த தந்தையை தரையில் இழுத்துப்போட்டு காலால் எட்டி உதைத்து இருக்கிறார். இதனால் தலையில் பலத்த காயமடைந்த சுந்தர மூர்த்தியை மீட்டு சிகிச்சைக்காக அனுமதி செய்யவே, நேற்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விஷயம் தொடர்பாக ராணியின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து கொரட்டூர் காவல் துறையினர், சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.