பேருந்தில் படிக்கட்டு பயணம்.. தோப்புக்கரணம் போட்டு படிக்க சென்ற மாணவர்கள்.. காவல் துறையினர் அதிரடி.!

பேருந்தில் படிக்கட்டு பயணம்.. தோப்புக்கரணம் போட்டு படிக்க சென்ற மாணவர்கள்.. காவல் துறையினர் அதிரடி.!


chennai-aavadi-school-students-risky-in-foot-board

பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்ட மாணவர்களை காவல்துறையினர் கீழே இறக்கி தோப்புக்கரணம் போட வைத்துள்ளனர்.

சென்னை ஆவடி குற்றப்பிரிவு ஆய்வாளர் அருணாச்சல ராஜா தலைமையில் நேற்று மாலை காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கண்காணிப்பில் இருந்த சில காவலர்கள், ஆவடியிலிருந்து கண்ணியம்மன் நகர், கோயில்பதாகை, முத்தாபுதுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் மாநகர பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்துள்ளனர்.

chennai

இதனைத் தொடர்ந்து பேருந்தை  காவல்துறையினர் வழிமறித்து, படிக்கட்டில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்ட மாணவர்களை பேருந்தில் இருந்து கீழே இறக்கி விட்டுள்ளனர். மேலும், "பள்ளி படிக்கும் காலத்தில் உற்சாகம் அவசியம் தான். ஆனால், படியில் பயணம் செய்வது உயிரையே நிமிடத்தில் அழிக்கும்" என கூறியுள்ளனர்.

தொடர்ந்து 'இதேபோல் இனி பயணம் செய்யாதீர்கள்' என்று தெரிவித்த நிலையில், அவர்களை தோப்புக்கரணம் போட வைத்துள்ளனர். இனி இவ்வாறு செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி, அவர்களுக்கு தகுந்த அறிவுரைகளை கூறி எச்சரிக்கை விடுத்து, வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.