மூதாட்டியையும் விட்டுவைக்காத காமக் கொடூரர்கள்; சென்னையில் இப்படி ஒரு அட்டூழியமா? - TamilSpark
TamilSpark Logo
தமிழகம் சமூகம்

மூதாட்டியையும் விட்டுவைக்காத காமக் கொடூரர்கள்; சென்னையில் இப்படி ஒரு அட்டூழியமா?

சென்னையில் 65 வயது மூதாட்டியை  கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 17 வயது சிறுவர்களில் ஒருவன் பிடிபட்ட நிலையில் மற்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை வியாசர்பாடி முல்லை நகர் குடிசைப்பகுதியில் தனியாக வசித்து வருபவர் லட்சுமி (65 ). இவர் அப்பகுதியில் உள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்து தனது பிழைப்பை நடத்தியுள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று இரவு அவரது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பொழுது மது போதையில் அவரது வீட்டிற்குள் நுழைந்த 17 வயது சிறுவர்கள் மூவர் அவரது வாயை பொத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து உள்ளார்கள். இதனை அறிந்த மூவரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக எம்.கே.பி நகர் மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள், மூதாட்டியை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், கொடுங்கையூர் பகுதியில் உள்ள எழில் நகரைச் சேர்ந்த 3 சிறுவர்கள் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. 

எழில் நகருக்கு விரைந்த காவல் துறையினர், அங்கே சுற்றித்திரிந்ந்த ஒரு சிறுவனை கைது செய்தனர். பிறகு சிறுவனிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டு, அவரை கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்த்திருந்த பள்ளியில் கொண்டுபோய் சேர்த்தனர். தப்பியோடிய 2 சிறுவர்கள் குறித்து காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.  


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo