அரசியல் தமிழகம் இந்தியா

#Breaking# தமிழகத்தில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!

Summary:

By election date announced

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21 இல் இடைத்தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல்  அதிகாரி அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் குறித்து டெல்லியில், தேர்தல் தேதி அறிவிப்பை தலைமை தேர்தல்  அதிகாரி அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பில் தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவித்தார். 
 

அந்த தோகுதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 30ஆம் தேதியுடன் நிறைவடையும். மனுக்கல் மீதான பரிசீலனை அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெறும். மேலும் மனுவை திரும்ப பெற அக்டோபர் 3 கடைசி நாள் என தெரிவித்தார்.

மேலும், புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிக்கும் அக்டோபர்21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் தலைமை தேர்தல்  அதிகாரி அறிவித்துள்ளார். 


Advertisement