உருவானது நீவர் புயல்.! கொட்டித்தீர்க்கும் கனமழை.! நிறுத்தப்பட்ட பேருந்து சேவை.!

உருவானது நீவர் புயல்.! கொட்டித்தீர்க்கும் கனமழை.! நிறுத்தப்பட்ட பேருந்து சேவை.!


buses-stopped-4-district

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி நிவர் புயலாக மாறி நாளை மாமல்லபுரம்-காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலானது  கனமழையுடன் 120 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலானது தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா மாநிலங்களில் கடலோர மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று மதியம் ஒரு மணிக்கு மேல் பேருந்துகள் இயக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த 7 மாவட்டங்களுக்கும் இடையே மறு உத்தரவு வரும் வரை பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து 470 கிலோ மீட்டர் தொலைவில் நிவர் புயல் சின்னம் நிலைகொண்டுள்ளதால் சென்னையில் கனமழை பெய்து வருகிறது.