எரிந்த நிலையில் கிடந்த இளம் பெண் சடலம்... போலீசார் விசாரணை..!!

எரிந்த நிலையில் கிடந்த இளம் பெண் சடலம்... போலீசார் விசாரணை..!!


Burnt body of young woman... Police investigation..

கள்ளக்குறிச்சி மாவட்டம் கொளத்தூர் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள சித்தேரியின் கரைப்பகுதிக்கு நேற்று காலை ஆடு மாடு மேய்க்கச் சென்றவர்கள், கரைப்பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பாதி எரிந்தும் எரியாத நிலையில் சடலமாகக் கிடந்ததைப் பார்த்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ், திருக்கோவிலூர் டிஎஸ்பி பழனி மற்றும் காவலர்கள் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

எரிப்பதற்கு முன் அந்த பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொலை செய்து அதன் பின்னர் சடலத்தை தீ வைத்து எரித்துள்ளது தெரியவந்துள்ளது. இந்நிலையில் அந்த பெண்ணை பற்றிய எந்த விவரமும் தெரியாததால் காவல்துறையினர் மோப்ப நாயின் உதவியுடன் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்த சம்பவம் குறித்து உண்மையைக் கண்டறிவதற்காக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் 5 தனிப்படை அமைத்து உத்தரவிட்டுள்ளார். மேலும் அப்பகுதியில் காணாமல் போன பெண்கள் குறித்த தகவல்களையும் காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர். 

இளம்பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்து எரிக்கப்பட்ட சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.