BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
கந்து வட்டிக் கொடுமையால் தொழிலதிபர் எடுத்த அதிர்ச்சி முடிவு.. கதறும் குடும்பத்தினர்!
கோவில்பட்டி அருகே கந்துவட்டி கொடுமையால் தொழிலதிபர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் 9வது தெருவை சேர்ந்தவர் ஆறுமுக பாண்டி. இவர் பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்ததோடு, வீட்டு மனை விற்பனையும் செய்து வந்துள்ளார். இவருக்கு சித்ரா என்ற மனைவியும், 2 பெண் பிள்ளைகளும் உள்ளனர்.

இந்த நிலையில் தன்னுடைய தொழில் முன்னேற்றத்திற்காக பத்துக்கும் மேற்பட்டோரிடம் கடன் பெற்று மாதம் தரும் வட்டி செலுத்தி வந்துள்ளார். இதில், தொழில் சரியாக நடைபெறாததால் அவர் வட்டி கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டுள்ளார்.
இதனிடையே பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்ததால், மனம் முடிந்த ஆறுமுக பாண்டி கடந்த ஜனவரி 25ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இதனையடுத்து ஆறுமுக பாண்டியை மீட்ட அவரது குடும்பத்தினர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.