சொந்த அக்காவை கழுத்தை அறுத்து கொலை செய்த தம்பி.. போலீசார் தீவிர விசாரணை.!

சொந்த அக்காவை கழுத்தை அறுத்து கொலை செய்த தம்பி.. போலீசார் தீவிர விசாரணை.!


Brother killed sister in Sivagangai

சிவகங்கை அருகே அக்காவின் கழுத்தை அறுத்து தம்பி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமு. இவர் அதே பகுதியில் கறிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு தேவையான என்ற மகளும், கண்ணன் என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் மகள் தேவயானி பிஎட் படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்தபடியே ஆசிரியர் தகுதி தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார்.

Crime

மகன் கண்ணன் தனது தந்தைக்கு உதவியாக கறிக்கடையில் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு தேவயானி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இருந்து கிடந்துள்ளார். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசாரை பார்த்த கண்ணன் அங்கிருந்து தப்பியோட முயற்சித்ததை பார்த்து போலீசார் மடக்கி பிடித்து கைது செய்து அழைத்து சென்றனர். இதனிடையே தேவயானி உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Crime

மேலும் கண்ணன் எதற்காக அக்காவை கொலை செய்தார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சொந்த அக்காவையே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.