அடேங்கப்பா! இந்த காலத்திலும் இப்படியொரு அண்ணன்- தம்பியா? சோகத்திலும் ஆச்சரியம்! மனதை உருக்கும் சம்பவம்!

Summary:

brother dead same day at nagai district

நாகை மாவட்டம் மயிலாடுதுறை, குருக்கள் பண்டார தெருவில் வசித்து வந்தவர் மதிவாணன். 56 வயது நிறைந்த அவர் ஆட்டோ டிரைவராக இருந்தார். அவரது தம்பி பன்னீர்செல்வம்.50 வயது நிறைந்த பன்னீர்செல்வம் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். 

 இந்நிலையில் இனி பன்னீர்செல்வம் உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லை என மருத்துவர்கள் கைவிட்ட நிலையில் அவரை குடும்பத்தினர்கள் வீட்டிற்கு அழைத்து வந்தனர். இந்நிலையில் தனது தம்பியின் உடல் நிலையை எண்ணி மதிவாணன் மிகுந்த மனவருத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு நேற்று நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். 

 அதனைத் தொடர்ந்து அவரை பரிசோதனை செய்ததில் உயிரிழந்ததாக தெரியவந்த நிலையில் அவரது உறவினர்கள் அனைவரும் வீட்டிற்கு வர துவங்கினர். அப்போது வீட்டில் படுக்கையில் இருந்த பன்னீர்செல்வம் தனது அண்ணன் உடலை பார்த்து கதறி அழுதுள்ளார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். அண்ணன் தம்பி இருவரையும் ஒற்றுமையைக் கண்டு உறவினர்கள் அனைவரும் கதறி அழுதனர் 

பின்னர் இருவருக்கும் ஒரே நேரத்தில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு, ஒன்றாகவே மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஒன்றாகவே தகனமும் செய்துள்ளனர். சாவிலும் இணைபிரியாத அண்ணன் தம்பியை கண்டு அப்பகுதி மக்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். 
 


Advertisement