என்ன ஒரு ஆனந்தம் அந்த பெண்ணிற்கு!! தாலி கட்டும்போது மணப்பெண் செய்த காரியத்தை பாருங்க..



Bride happy moment when knot thaali viral video

மணமகன் தாலி கட்டுகையில் மணப்பெண் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்த வீடியோ ஒன்று இணையவாசிகளிடையே வைரலாகி வருகிறது.

பொதுவாக திருமண சமயத்தில் மணப்பெண்ணும், மாப்பிள்ளையும் அமைதியாக இருப்பதுதான் வழக்கம். அதிலும் தாலி கட்டும் நேரத்தில் குறிப்பாக பெண்கள் குனிந்த தலை நிமிராமல், பயபக்தியோடு தாலியை அணிந்துகொள்வதைத்தான் நாம் அதிகம் பார்த்திருப்போம். ஆனால் இந்த வீடியோவில் வரும் மணமக்கள் அதற்கு நேர்மாறாக செய்த காரியம் தற்போது வைரலாகிவருகிறது.

அந்த வீடியோவில் மாப்பிளை மணமகளுக்கு தாளிக்காட்டும்போது,  மணமகள் கைகளை தட்டிக் கொண்டு, ஹோ வென சத்தமிட்டு கொண்டு அமர்ந்தபடியே துள்ளி குதித்தபடி சந்தோஷத்தில் ஆர்பரித்துள்ளார். ஹே.. எனக்கும் கல்யாணம் ஆயிடுச்சு என்பதுபோல் மணமகள் செய்த இந்த சேட்டை தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.