இலகுரக விமானம் விபத்து... 2 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..!
ஸ்கை டைவர்கள் சென்ற இலகுரக விமானம் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
பிரேசில் நாட்டின் போய்ட்டுவா நகரில் ஸ்கை டைவிங் சுற்றுலா நிறுவனம் ஒன்று உள்ளது. இதில் பொழுதுபோக்கிற்காக ஸ்கை டைவிங் செய்ய வீரர்கள் விமானத்தில் புறப்பட்டு செல்வது வழக்கமான ஒன்றாகும்.
அதேபோல இன்று ஸ்கை டைவிங் செய்ய வீரர்கள் விமானத்தில் புறப்பட்ட நிலையில், சிறிது நேரத்திலேயே அந்த விமானம் வேகமாக தரையில் விழுந்து நொறுங்கியுள்ளது.
இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் 14 பேர் காயமடைந்துள்ளனர். பின் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 14 பேரையும், மீட்டு அவர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து கடந்த 50 ஆண்டுகளில் ஸ்கை டைவிங் தொடங்கப்பட்ட நாளில் இருந்து இதுதான் முதல் விபத்து என்று மேயர் எட்சன் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement