ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
சிறுமியை சீரழித்த 15 வயது சிறுவன்: போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார்..!
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சிறுவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு படித்து வரும் 12 வயது சிறுமிக்கு அந்த சிறுமியின் உறவுக்கார 15 வயது சிறுவன் ஒருவன் சில நாட்களாக தொடர்ந்து அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளான். இதனால் அந்த சிறுமி மன உளைச்சலுடன் காணப்பட்டுள்ளார். மேலும் அந்த சிறுமிக்கு உடல்நல பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
சிறுமி மிகவும் சோர்ந்து காணப்பட்டுள்ளார் இதனால் அந்த சிறுமியின் தாய் சிறுமியை விசாரித்தபோது, தனக்கு அந்த உறவுக்கார பையன் பாலியல் தொல்லை கொடுப்பதை சிறுமி அழுதபடியே தனது தாயிடம் கூறியுள்ளார்.
இதைக் கேட்ட அவரது தாயார் ஆத்திரம் அடைந்தார். உடனே இதுகுறித்து தண்டையார் பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், நேற்று மாலை சிறுமியின் தாயார் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி அந்த சிறுவனை விசாரித்தபோது, விசாரணையில் அந்த சிறுவன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததை ஒப்புக்கொண்டான்.
இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, 15 வயது சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.