செ*ஸ் டார்ச்சர் கொடுத்து போக்ஸோவில் உள்ளே போனவன் மாணவியின் கழுத்தறுத்த பயங்கரம்.. நடுரோட்டில் துள்ளத்துடிக்க அரங்கேறிய துயரம்..!!

செ*ஸ் டார்ச்சர் கொடுத்து போக்ஸோவில் உள்ளே போனவன் மாணவியின் கழுத்தறுத்த பயங்கரம்.. நடுரோட்டில் துள்ளத்துடிக்க அரங்கேறிய துயரம்..!!


boy murder attempt to school girl erode

மாணவிக்கு பாலியல் தொல்லையளித்து போக்ஸோவில் உள்ளே போனவன் ஜாமீனில் வந்து, மாணவியை பழிவாங்க கழுத்தறுத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி, பவானிசாகரில் உள்ள அரசுபள்ளியில் பயின்று வந்துள்ளார். இவர் சம்பவதினத்தன்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு பவானிசாகரில் இருந்து பகுடுதுறை செல்லும் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற இளைஞர், யாருமில்லாத பகுதிக்கு சென்றதும் மாணவியின் கையை பிடித்து தரதரவென மறைவான பகுதிக்கு இழுத்து சென்றுள்ளார். 

மேலும் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்தை அறுக்க முயற்சி செய்த நிலையில், மாணவி அலறவே அருகிலிருந்தவர்கள் வந்துபார்த்தபோது இளைஞர் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். மேலும் கழுத்தில் ரத்தகாயத்துடன் இருந்த பள்ளி மாணவியை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்துள்ளனர். 

erode

தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. பின் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற இளைஞர், பவானிசாகர் இலங்கை தமிழர் முகாமைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மகன் நவீன்குமார் என்பது தெரியவந்தது. 

அவர் முன்பே பள்ளி மாணவியிடம் அத்துமீரும் முயற்சியில் ஈடுபட்டு போக்சோவில் கைதாகி, பின் ஜாமினில் வெளியே வந்ததும் தெரியவந்தது. மாணவி முதலில் புகார் கொடுத்ததால் அவரை பழிவாங்குவதற்காக கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்ததும் தெரியவருகிறது. அத்துடன் காவல்துறையினர் தலைமறைவாகியுள்ள நவீன்குமாரை வலைவீசி தேடிவருகின்றனர்.