தங்கையை காதலித்த அண்ணன்; காதலை கைவிட்ட தங்கையை கொலை செய்து, தானும் தற்கொலை செய்த பயங்கரம்.!

தங்கையை காதலித்த அண்ணன்; காதலை கைவிட்ட தங்கையை கொலை செய்து, தானும் தற்கொலை செய்த பயங்கரம்.!


Boy loved and killed a girl

உயிருக்கு உயிராய் காதலித்து வந்தவர் அண்ணன் முறைகொண்டவர் என்பதை உணர்ந்து காதலை கைவிட்ட பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குளவாய்பட்டி, மயிலாடிகாடு கிராமத்தில் வசித்து வருபவர் பன்னீர். இவரின் மகள் பவித்ரா. புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் இளங்கலை துறையில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். 

பவித்ராவும் - அதே பகுதியை சார்ந்த கூலித்தொழிலாளியான துரை என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் உறவினர்களாக இருந்த நிலையில், காதல் வயப்பட்டு பின் நாட்களில் இருவரும் அண்ணன் - தங்கை உறவு என்பதை அறிந்துள்ளனர். 

இதனால் பவித்ரா துரையின் காதலுக்கு மறுப்பு தெரிவிக்கவே, துரை அதனை கண்டு கொள்ளாமல் காதலிக்க வற்புறுத்தி இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பவித்ரா அம்மை நோயால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்துள்ளார்.

tamilnadu

நேற்று பவித்ராவின் பெற்றோர் வழக்கம் போல கூலி வேலைக்கு சென்று விட்டனர். அப்போது, பவித்ராவின் வீட்டிற்குள் சென்ற துரை, தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். 

பின்னர் துரையும் அங்கேயே தற்கொலை செய்து கொண்ட நிலையில், தகவல் அறிந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள ஆலங்குடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.