காதலிக்க மறுத்த கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடுமை.!

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடுமை.!


Boy attack girl didn't accept love in Chennai

சென்னை மேடவாக்கத்தில் காதலிக்க மறுத்த மாணவியை இளைஞர் கத்தியா குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மேடவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள வண்டலூரில் உள்ள கல்லூரிக்கு செல்வதற்காக டிப்ளமோ படிக்கும் மாணவி காத்திருந்துள்ளார். அப்போது அங்கிருந்த ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த வசந்த் என்ற இளைஞர் மாணவியை கத்தியால் குத்தி விட்டு தப்பித்து சென்றுள்ளார்.

chennai

இதில் மாணவிக்கு உடல் முழுவதும் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

chennai

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்ததில் ஒரு தலை காதலால், இளைஞர் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.