"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
பெண்கள் பள்ளியில் பிறந்தநாள் கொண்டாட்டம்.. 17 வயது சிறுவன் கைது!
திருவண்ணாமலை அருகே பெண்கள் பள்ளியில் பிறந்தநாள் கொண்டாடிய 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கோவிலில் அனுமதி இன்றி பிறந்தநாள் பேனர்கள் வைத்து பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டதாக போலீசாருக்கு புகார் வந்துள்ளது.
அதன்படி வளையாம்பட்டு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பேனர் வைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியுள்ளது.
அனுமதி இன்றி பேனர் வைத்து உள்ளிட்ட புகார்கள் மீது செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடி வந்தனர். இந்த நிலையில் செங்கம் பகுதியில் சுற்றி திரிந்த சிறுவனை நேற்று போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து செங்கம் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போதே நீதிபதியின் உத்தரவின் பேரில் கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சிறுவனை போலீசார் அடைத்தனர்.