மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!


Bomb threatened in meenatchi amman temple

 

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் போலீசார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

உலக அளவில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில். இந்தநிலையில்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு திடீரென வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், மீனாட்சி அம்மன் கோவில் வளாக பகுதிகளில் காவல்துறையினர் தீவிர சோதனை  மேற்கொண்டுள்ளனர்.

temple
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தீவிர சோதனைக்கு பிறகே  தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். கோவிலின் உள்பகுதியிலும் நுழைவு பகுதிகளிலும் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வாயிலாக விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் முதற்கட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவிலை சுற்றி கூடுதல் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.