பயங்கரவாதத்தின் தலைநகராக உருவாகும் தமிழ்நாடு.. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி.!

பயங்கரவாதத்தின் தலைநகராக உருவாகும் தமிழ்நாடு.. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி.!



BJP Annamalai Pressmeet about Coimbatore Car blast Mystery as Suicide Bomb Attack

 

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடந்துள்ளது. குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர் தனது சாதித்திட்டத்தில் ஈடுபட முயற்சித்தபோது பலியாகி இருக்கிறார். ஆகையால், இதனை என்.ஐ.ஏ விசாரிக்க உடனடி அனுமதி வழங்க வேண்டும் என பாஜக அண்ணாமலை கோரிக்கை வைத்தார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், "கோவை, சேலம், ஈரோடு மாவட்டங்கள் மாறிக்கொண்டு இருக்கின்றன. அதுகுறித்து பல எச்சரிக்கை கொடுத்ததும் பலனில்லை. சமீபத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த கோவை வெடி விபத்தில் இறுதிக்கட்டத்தில் திட்டம் அவர்களால் தோல்வியுற்று அவரே பலியாகியுள்ளார். இதனை தமிழ்நாடு காவல்துறை, முதலமைச்சர் மறுக்கிறார்கள். சிலிண்டர் வெடித்தது என்று கூறுகிறார்கள். 

தீபாவளி என்றால் அன்றைய நாட்களில் பட்டாசு வெடிப்பது ஒருபுறம் இருந்தால், பாம் வெடிப்பது மற்றொருபுறம் என நடந்து வந்தது. மீண்டும் தமிழ்நாட்டினை தலைநகராக வைத்து பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சிக்கிறார்களா ? என்று சந்தேகம் கிளம்பியுள்ளது. இது தற்கொலைப்படை தாக்குதல் என தமிழ்நாடு அரசு ஒப்புக்கொள்ள வேண்டும். என்.ஐ.ஏ களத்தில் இறங்கி விசாரணை நடந்த வேண்டும். 

சாராயத்திற்கு அரசு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. சாராய விற்பனை இலக்கு என பேசுகிறார்கள். ஆனால், கோவை தற்கொலைப்படை தாக்குதலை திமுக அரசு வெடி விபத்து என கூறுகிறார்கள். கோவையில் நடந்தது தற்கொலைப்படை தாக்குதல். திமுக அரசு அதனை சிலிண்டர் வெடித்து விபத்து என பேசச்சொல்கிறது" என்று தெரிவித்தார்.