திடீர் CBI அதிகாரிகளாக மாறிய வங்கி ஊழியர்கள்..! என்ன காரணம் தெரியுமா..?

திடீர் CBI அதிகாரிகளாக மாறிய வங்கி ஊழியர்கள்..! என்ன காரணம் தெரியுமா..?


Bank officers appointed as CBI inspectors

பொருளாதார குற்றங்கள் தொடர்பாக விசாரிக்கும்போது சி.பி.ஐ அதிகாரிகளுக்கு வாங்கி அதிகாரிகள் ஆலோசனை வழங்குவது வழக்கம். இந்நிலையில் நாட்டில் முதல் முறையாக 4 SBI வங்கி அதிகாரிகளை நேரடியாக சிபிஐயில் ஆய்வாளர்களாக நியமித்துள்ளது சிபிஐ. 

இவர்கள் 5 ஆண்டுகள் சிபிஐ யில் ஆய்வாளர்களாக பதவியில் இருப்பார்கள் என்று சிபிஐ தெரிவித்துள்ளது. பொருளாதார சம்மந்தமான குற்றங்களை இவர்கள் விசாரித்து அதற்கான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் அதிகாரம் இவர்களுக்கு இருப்பதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

மொத்தம் 4 பேர் இதற்கு தேர்வாகியுள்ள நிலையில் அதில் இரண்டுபேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். கோவை குனியமுத்தூர் எஸ்.பி.ஐ வங்கிக்கிளையில் பணியாற்றும் கோபாலகிருஷ்ணன் மற்றும் திருவண்ணாமலை கிளையில் பணியாற்றும் லக்‌ஷ்மிகாந்த் என்பவர்கள் தமிழகத்தில் இருந்தும் மற்ற இரண்டுபேர் அசாம் மற்றும் கோவாவில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.