கூலிப்படை வைத்து காதல் மனைவிக்கு ஸ்கெட்ச்... காவல்துறை விசாரணையில் அம்பலமான உண்மை.!

கூலிப்படை வைத்து காதல் மனைவிக்கு ஸ்கெட்ச்... காவல்துறை விசாரணையில் அம்பலமான உண்மை.!


baniyan-company-owner-plan-to-murder-his-wife-with-the

திருப்பூரில் குடும்ப பிரச்சினை காரணமாக காதல் மனைவியை கூலிப்படைய ஏவி கொலை செய்ய முயன்ற கணவர் உட்பட  ஐந்து பேரை காவல்துறை கைது செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக தீவிரமான விசாரணையில் ஈடுபட்டு வருகிறது காவல்துறை.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள முரட்டுபாளையம் என்ற பகுதியைச் சேர்ந்தவர்  மணிமாறன் இவர் சொந்தமாக வீட்டிலேயே பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு மாங்கனி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்திருந்தார் இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

Tirupur

சில தினங்களுக்கு முன்பு மணிமாறன் வீட்டிற்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரது மனைவி மாங்கனியை கொலை செய்ய முயன்றுள்ளனர். இதனைக் கண்ட மாங்கனி அலரி சத்தமிட்டு இருக்கிறார். அவரது சத்தத்தை கேட்ட பனியன் கம்பெனியில் வேலை செய்த ஊழியர்கள் இவரது வீட்டிற்குள் புகுந்தனர். இதனைத் தொடர்ந்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில்  திடுக்கிடும் உண்மைச் சம்பவம் வெளியாகி அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. குடும்ப பிரச்சினை காரணமாக மணிமாறனே கூலிப்படை  நியமித்து தனது மனைவியை கொலை செய்ய திட்டம் தீட்டி இருப்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து மணிமாறன் உட்பட கூலிப்படையினர் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.