ச்சைக்.. டொமினோஸ் பீட்சா மாவுக்கு அருகே பாத்ரூம் மாப், ஸ்டிக்.. பீட்சா பிரியர்கள் கவனத்திற்கு.. உஷார்..!

ச்சைக்.. டொமினோஸ் பீட்சா மாவுக்கு அருகே பாத்ரூம் மாப், ஸ்டிக்.. பீட்சா பிரியர்கள் கவனத்திற்கு.. உஷார்..!


bangalore-dominos-pizza-toilet-cleaning

காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப புது விதமான உணவுகளையும் நாம் சாப்பிட்டு வருகிறோம். அந்த வகையில், இன்றுள்ள இளம் தலைமுறையிடையே வெகுவாக அறிமுகமாகி இருக்கும் உணவுகளில் முக்கியமானது பீட்சா. இதனை சாப்பிட வேண்டும் அல்லது ஒருமுறையாவது சாப்பிட்டு பார்த்திட வேண்டும் என்று நினைக்காத ஆட்களே இல்லை என்று தான் கூற வேண்டும். 

அந்த அளவுக்கு பீட்சாவானது விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் இருக்கும் டாமினோஸ் உணவகத்தில் தயாரிக்கப்பட்ட பீட்சா மாவுக்கு அருகிலேயே கழிவறையில் உபயோகம் செய்யப்படும் மாப் மற்றும் பிரஸ் போன்ற பொருட்கள் வைக்கப்பட்டு இருந்துள்ளன. 

இது குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இது பீட்சா பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே உணவகங்களில் உணவுகள் தரக்குறைவாக தயாரிக்கப்பட்டுவதாக புகார்கள் எழுகிறது. சில இடங்களில் தரக்குறைவான உணவால் உயிரிழப்பும் நடக்கிறது. இந்த சமயத்தில் மேற்கூறிய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்துகிறது.