தமிழகம் இந்தியா

கத்தி குத்து! ஐயப்பா பக்தர்கள் மீது தாக்குதல்! தமிழ்நாடு - கேரளா எல்லையில் பரபரப்பு!

Summary:

Ayyappa devotees attacked near kerala border

கார்த்திகை, மார்கழி மாதம் என்றாலே உலகின் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் மாலை அணிந்து கேரளாவில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு செல்வது வழக்கம். இதுவரை ஆண்கள் மட்டுமே ஐயப்பன் கோவிலுக்கு செல்லவேண்டும் என்ற வழக்கம் இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு வெளிவந்த நீதிமன்ற தீர்ப்பின் படி பெண்களுக்கும் ஐயப்பன் கோவிலுக்குள் செல்லலாம் என தீர்ப்பு வந்தது.

நீதிமன்ற தீர்ப்பை அடுத்து பெண்கள் பலர் ஐயப்பன் கோவிலுக்கு செல்ல முயன்றனர். ஆனால் கேரளாவில் நடந்த பல்வேறு கலவரங்களால் அவர்கள் திருப்பி அனுப்ப பட்டனர். இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு இரண்டு பெண்கள் ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்ததை அடுத்து கோவில் நடை சாத்தப்பட்டது.

மேலும் தமிழகம் - கேரளா எல்லையில் பல்வேறு கலவரங்கள் நடைபெற்றன. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளைவில் இருமுடி கட்டுடன் சபரிமலை செல்ல இருந்த அய்யப்ப பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருமுடி கட்டுடன் சரவணா கோஷம் சொல்லி சென்றுகொண்டிருந்த ஐயப்ப பகதர்கள் மீது ஆட்டோ ஓட்டுனர்களான அசோகன், முஸ்தபா, டைட்டஸ் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பிரசாத் , ஜெரின் ஆகியோருக்கு கத்தி குத்து பட்டு படுகாயம் அடைந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர். 

இந்த சமபவத்தை அடுத்து ஐயப்ப பக்தர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
 


Advertisement