திருமயம் அருகே பயங்கர விபத்து! ஐயப்ப பக்தர்கள் பலி 10 ஆக உயர்வு

திருமயம் அருகே பயங்கர விபத்து! ஐயப்ப பக்தர்கள் பலி 10 ஆக உயர்வு


ayapan-devotees-dead-in-road-accident

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வேனும், கன்டெய்னர் லாரியும் மோதிய விபத்தில் 7பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திராவைச் சேர்ந்த அவர்கள் சபரிமலைக்கு சென்று திரும்பும் போது இந்த கோர சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஆந்திராவைச் சேர்ந்த ஒரு குழுவினர் சபரிமலைக்கு சாமி கும்பிடுவதற்காக சில நாட்களுக்கு முன்பு சென்றுள்ளனர். சாமி தரிசனம் முடிந்து டெம்போ வேனில் அவர்கள் வீடு திரும்பியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வந்து கொண்டிருந்தபோது ஐயப்ப பக்தர்கள் வந்த வேணும் கண்டெயினர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. 

இந்த கோர விபத்தில் டெம்போ வேன் டிரைவர் உட்பட 7 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் படுகாயமடைந்த 4 பேர் திருமயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இப்போது  மேலும் 3 பேர் பலியாகினர்.