தமிழகம் இந்தியா உலகம் Covid-19

இன்னும் எண்ணலாம் நடக்க போகுதோ!! இந்தியாவிலிருந்து சொந்த நாட்டுக்கு வந்தா 5 ஆண்டு சிறை.. அதிரடியாக அறிவித்த நாடு!!

Summary:

இந்தியாவில் இருந்து தங்கள் சொந்த நாடான ஆஸ்திரேலியாவுக்கு திரும்பும் குடிமக்களுக்கு 5 ஆண்டு

இந்தியாவில் இருந்து தங்கள் சொந்த நாடான ஆஸ்திரேலியாவுக்கு திரும்பும் குடிமக்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவித்துள்ளது ஆஸ்த்ரேலியா.

இந்தியாவில் பயங்கர வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுக்கடங்காமல் செல்வதால் உலக நாடுகளே இந்தியாவை உற்றுநோக்கிவருகிறது. இந்தியாவில் இருந்து தங்கள் நாட்டிற்கு யாரும் தற்போது வர கூடாது எனவும் பல நாடுகள் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் நிலவும் மோசமான சூழல் காரணமாக, இந்தியாவில் வசித்துவரும் ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த யாரும் தற்போதைக்கு தங்கள் சொந்த நாட்டிற்கு வரக்கூடாது எனவும், அப்படி வந்தால் அவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது $66,000 டாலர் அபராதம் விதிக்கப்படும் என ஆஸ்திரேலிய அரசு எச்சரித்துள்ளது. ஆஸ்திரேலிய அரசின் இந்த புதிய விதிமுறை இன்று (மே 1) முதல் அமலுக்கு வருகிறது.

இந்தியாவில் இருந்து கொரோனா பாதிப்பு ஆஸ்திரேலியாவுக்கு பரவிவிட கூடாது என்பதற்காகவே இந்த அதிரடி உத்தரவை ஆஸ்திரேலியா பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.


Advertisement