அடிப்பாவி.. உன்னோட சுகத்துக்காக என் புள்ள வாழ்க்கைய அழிச்சிட்டியே.. கள்ளக்காதல் விவகாரம்.. ரயில் முன் பாய்ந்த கணவர்..!



atipavi-i-ruined-my-whole-life-for-your-sake-the-issue

திருச்சி அருகே உள்ள மாந்துறை நெடுஞ்சாலை பகுதியில் வசித்து வருபவர் ராஜா- வித்யா தம்பதியினர். இவர்களுக்கு ஏழு வயதில் ஒரு மகளும், ஐந்து வயதில் ஒரு மகனும் உள்ளனர். ராஜா கட்டிட வேலைகளுக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்த நிலையில் போதிய வருமானம் இல்லாததால் வெளியூர் வேலைகளுக்கும் சென்று தங்கி வேலை செய்து வந்துள்ளார்.

மேலும் குடும்பத்தின் வறுமையை சமாளிப்பதற்காக மனைவி வித்தியாவும் திருச்சியில் உள்ள பிரபலமான துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது அங்கு உடன் பணியாற்றும் இளைஞர் ஒருவருடன் வித்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதோடு மட்டுமல்லாமல் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

Forgery issue

இதனையடுத்து தனது மனைவி வித்தியாவின் கள்ளக்காதல் விவகாரமானது கணவர் ராஜாவுக்கு தெரிய வரவே இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் கள்ளத்தொடர்பை விட்டு விடும்படி மனைவி வித்தியாவை ராஜா பலமுறை எச்சரித்துள்ளார். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக லால்குடி காவல் நிலையத்தில் ராஜா புகார் ஒன்றை அளித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வித்யா தனது கள்ளக்காதலுடன் வீட்டை விட்டு ஓடியுள்ளார். இதனால் விரக்தி அடைந்த ராஜா மனவேதனையில் இருந்து வந்துள்ளார். மேலும் குழந்தைகளை விட்டு விட்டு கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய மனைவியின் பிரிவை தாங்காமல் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து மேல வாளடி ரயில்வே  மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த ரயில் முன்பு பாய்ந்து ராஜா தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விருத்தாச்சலம் ரயில்வே போலீசார் தற்கொலை செய்து கொண்ட ராஜாவின் உடல் பாகங்களை சேகரித்து அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.