தமிழகம்

ஆபாச படம் பார்ப்பவர்கள் விவகாரம்! ஆபாச படத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்தவர் கைது!

Summary:

Assam man arrested in covai for uploading videos

உலகம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து நிலையில் அமெரிக்கா நடத்திய ஆய்வில் இந்தியாவில், அதுவும் சென்னையில்தான் அதிகமாக குழந்தைகள் சம்மந்தமான ஆபாச படம் பார்க்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.

இந்நிலையில் குழந்தைகள் சம்மந்தமான ஆபாச படம் பார்ப்பவர்கள், பகிர்பவர்கள் என பட்டியலை தயார் செய்து சிலரை கைதும் செய்துள்ளது தமிழக போலீஸ். இந்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் வேலைபார்த்துவரும் அசாம் மாநிலத்தை சேர்ந்த ரெண்டா பாசுமடாரி என்ற வாலிபரை குழந்தைகளின் ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றிய குற்றத்திற்காக போலீசார் கைது செய்துள்ளன்னர்.

குறிப்பிட்ட இளைஞரின் தொலைபேசியை சோதனை செய்தபோது சிறார்களின் ஆபாச படம் இருந்ததும், அந்த படங்களை ரெண்டா பலருக்கும் பகிர்ந்ததும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து ரெண்டாவை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.


Advertisement