லடாக் எல்லையில் பணியில் இருந்த இராணுவ வீரர்! வீட்டில் தனியாக இருந்த மனைவி மற்றும் தாயாருக்கு நேர்ந்த கொடூரம்!

லடாக் எல்லையில் பணியில் இருந்த இராணுவ வீரர்! வீட்டில் தனியாக இருந்த மனைவி மற்றும் தாயாருக்கு நேர்ந்த கொடூரம்!


army-man-wife-and-mom-murdered-in-svagangai

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள முடுக்கூரணி கிராமத்தை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் சந்தியாகு என்பவரின் மனைவி ராஜகுமாரி. இவர்களுக்கு ஸ்டீபன் மற்றும் ஜேம்ஸ்ராஜ் என 2 மகன்கள் உள்ளனர்.

இவர்களின் இரண்டு மகன்களும் தற்போது ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். தற்போது இராணுவ வீரர் ஸ்டீபன் லடாக் எல்லையில் பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில் சிவகங்கையில் உள்ள ஸ்டீபன் வீட்டுக்குள் நேற்று அதிகாலை கொள்ளையர்கள் புகுந்துள்ளனர்.

அப்போது வீட்டின் முகப்பு பகுதியில் படுத்திருந்த ஸ்டீபனின் தாய் ராஜகுமாரி கொள்ளையர்கள்  வருவதை பார்த்து எழுந்தார். உடனே கொள்ளையர்கள், அவரது தலையில் இரும்பு கம்பியால் பலமாக அடித்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் விழுந்த ராஜகுமாரி சற்று நேரத்தில் பரிதாபமாக இறந்தார். 

army man family

பின்னர் கொள்ளையர்கள், வீட்டிற்குள் புகுந்து அங்கு தூங்கிக் கொண்டிருந்த ஸ்டீபனின் மனைவி சினேகாவின் தலையிலும் இரும்பு கம்பியால் பலமாக சரமாரியாக தாக்கி, அவரையும் கொலை செய்தனர். இந்த சம்பவத்தில், குழந்தை மட்டும் உயிர் தப்பியது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு மோப்ப நாயுடன் விரைந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து வீட்டில் இருந்த நகைகளை திருடி சென்றுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சிவங்கையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.