40-க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரைக்காத்து உட்கார்ந்தவாறே உயிரைவிட்ட ஓட்டுநர்... நெஞ்சை உலுக்கும் சோகம்.. மாரடைப்பால் மரணம்.!

40-க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரைக்காத்து உட்கார்ந்தவாறே உயிரைவிட்ட ஓட்டுநர்... நெஞ்சை உலுக்கும் சோகம்.. மாரடைப்பால் மரணம்.!


Ariyalur Jayankondam SriMushnam Driver Died While on Job

பேருந்தை இயக்கும்போதே மாரடைப்பால் ஓட்டுநர் துடிதுடித்து உயிரிழந்த சோகம் ஜெயங்கொண்டம் அருகே நடந்துள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம், ஸ்ரீ முஷ்ணம் கிராமம் வழியாக குணமங்கலம் வரை செல்லும் அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்தை பெரிய தாத்தூர் கிராமத்தில் வசித்து வரும் கனகசபையின் மகன் புருஷோத்தமன் (வயது 58) என்பவர் இயக்கி வருகிறார்.

இந்நிலையில், நேற்று பேருந்து தனது வழித்தடத்தில் பயணம் செய்துள்ளது. பேருந்தில் 40 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். அப்போது, பேருந்து ஸ்ரீமுஷ்ணம் எம்.ஜி.ஆர் நகர் பேருந்து நிறுத்தத்திற்கு சென்றபோது, ஓட்டுனருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. 

இதனால் அவர் பேருந்தை சுதாரித்து நிறுத்திவிட்டாலும், நெஞ்சு வலியால் துடித்து அங்கேயே மயங்கினார். அவரை மீட்ட நடத்துனர் மற்றும் பொதுமக்கள், அருகில் இருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். 

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஓட்டுநர் புருஷோத்தமன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த ஸ்ரீமுஷ்ணம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.