தினமும் மதுபோதையில் கணவர், மாமனார் ரகளை.. கர்ப்பிணி பெண் அடித்து கொலை?.. அரியலூரில் அதிர்ச்சி.!

தினமும் மதுபோதையில் கணவர், மாமனார் ரகளை.. கர்ப்பிணி பெண் அடித்து கொலை?.. அரியலூரில் அதிர்ச்சி.!


Ariyalur Jayankondam Pregnant Woman Mystery Suicide Death Husband and his Father Daily Torture

கர்ப்பிணி பெண்ணிடம் தினமும் கணவர், கணவரின் தந்தை தகராறு செய்து வந்ததால், மனமுடைந்த பெண்மணி மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம், கல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்புமணி (வயது 30). இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். கண்டியங்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் சகுந்தலா (வயது 26). இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த 5 வருடத்திற்கு முன்னர் திருமணம் நடைபெற்று முடிந்தது. 

தற்போது, தம்பதிகள் இருவருக்கும் 8 மாத கைக்குழந்தை உள்ள நிலையில், சகுந்தலா மீண்டும் 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில், அன்புமணியின் மாமனார் செல்வராஜ் (வயது 55), அடிக்கடி மருமகள் சகுந்தலாவுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். சகுந்தலா தனது கணவரிடம் இதுகுறித்து கூறியும், அவர் கண்டுகொள்ளவில்லை.

கடந்த சில மாதமாகவே தந்தையும் - மகனும் மதுபானம் அருந்திவிட்டு சகுந்தலாவை கர்ப்பிணி என்றும் பாராது அடித்து, சித்ரவதை செய்து வந்துள்ளனர். இதனால் மனமுடைந்துபோன சகுந்தலா, தனது வீட்டில் விஷயத்தை கூறினால் வருத்தப்படுவார்கள் என நினைத்து மனஅழுத்தத்துடன் வாழ்ந்து வந்துள்ளார். 

Ariyalur

நேற்று இரவு நேரத்தில் மாமனார் செல்வராஜ் மீண்டும் மருமகளிடம் தகராறில் ஈடுபட்ட நிலையில், செல்வராஜ் உறங்க சென்றுள்ளார். மனவருத்தத்துடன் தனியாக இருந்த சகுந்தலா, இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த உறவினர்கள், அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும், சகுந்தலாவின் சகோதரர் சேகர் அன்புமணியை அடிக்க பாய்ந்து, அக்காவை இழந்த வருத்தத்தில் ஆவேசத்துடன் செயல்பட்டார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் காவல் துறையினர், சகுந்தலாவின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் சகுந்தலா உண்மையில் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்து உடலை தூக்கில் தொங்கவிட்டனரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.