3 திருமணம் + கள்ளக்காதல்.. 14 வயது சிறுமியை மணம்முடித்து, சீரழித்த பேருந்து நடத்துனர்.! மகளுக்கு தாய் செய்த துரோகம்.!

3 திருமணம் + கள்ளக்காதல்.. 14 வயது சிறுமியை மணம்முடித்து, சீரழித்த பேருந்து நடத்துனர்.! மகளுக்கு தாய் செய்த துரோகம்.!


Ariyalur Jayankondam Conductor Radhakrishnan Affair Child Marriage Sexual Abuse

கள்ளகாதலியின் 13 வயது மகளை 4 ஆவதாக திருமணம் செய்த நடத்துனர், சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். தாயே மகளுக்கு செய்த பெருங்கொடூர செயல் குறித்த பதைபதைப்பு தகவல் வெளியாகியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம், பெரிய கருக்கை கிராமத்தை சார்ந்தவர் ராதா கிருஷ்ணன். இவர் அரசு போக்குவரத்துக்கழகத்தின் ஜெயங்கொண்டம் பணிமனையில், நடத்துனராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மூன்று திருமணம் நடைபெறும் குழந்தை இல்லை. 

இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தை சார்ந்த பரமேஸ்வரி என்பவருடன் ராதா கிருஷ்ணன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளார். பரமேஸ்வரி தனது 3 மகள்களில், 13 வயதாகும் இளைய மகளுடன் வந்து ராதாகிருஷ்ணனுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி சிறுமிக்கும் - இராதாகிருஷ்ணனுக்கும் பெரிய கருங்கை கிராமத்தில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் நடந்துள்ளது. 

Ariyalur

இந்த திருமணத்தை, இராதாகிருஷ்ணனின் தாயார் ருக்மணி, கள்ளக்காதலி பரமேஸ்வரி ஆகியோர் நடத்தி வைத்துள்ளனர். இராதாகிருஷ்ணன் சிறுமியுடன் வற்புறுத்தி உடலுறவு வைத்துக்கொண்ட காரணத்தால், சிறுமி 5 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்த விஷயம் தொடர்பாக அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இந்த தகவலை அறிந்த அதிகாரி, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நடத்துனர் இராதாகிருஷ்ணன் மற்றும் பரமேஸ்வரி ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர். இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.