மரம் வெட்டு தொழிலாளி தற்கொலை.. வேப்பமரத்தில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்.!

மரம் வெட்டு தொழிலாளி தற்கொலை.. வேப்பமரத்தில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்.!


Ariyalur Coli Worker Mystery Death Suicide Police Investigation

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சுத்தமல்லி, நந்தவெளி கீழத்தெருவில் வசித்து வருபவர் காசிநாதன். இவரின் மகன் சௌந்தர்ராஜன் (வயது 30). இவர் மரம் வெட்டும் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வழக்கம்போல மரம் வெட்ட சென்றவர், மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. அவரை பல இடங்களில் உறவினர்கள் தேடியும் காணவில்லை. 

இதனால் காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்த நிலையில், நேற்று முன்தினம் சுத்தமல்லி பெரிய ஓடை அருகேயுள்ள வேப்பமரத்தில் சௌந்தர்ராஜன் தூக்கிட்டு தொங்கியுள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடையார்பாளையம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

Ariyalur

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சௌந்தர்ராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.