சத்தமே இல்லாமல் முதல்வரின் நிவாரண நிதிக்கு பணத்தை அள்ளிக் கொடுத்த அரசன் சோப்.! தொகை எவ்வளவு தெரியுமா.?

சத்தமே இல்லாமல் முதல்வரின் நிவாரண நிதிக்கு பணத்தை அள்ளிக் கொடுத்த அரசன் சோப்.! தொகை எவ்வளவு தெரியுமா.?


arasan-soap-company-given-corona-relief-fund

தமிழகத்தில் கொரோனா பரவலின் 2ஆம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் தற்போது ஒரு நாளைக்கு 30 ஆயிரத்திற்கு அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில்கொரோனா நிவாரண பணிகளுக்கு பெருமளவில் நிதி தேவைப்படுகிறது. 

இதனைத்தொடர்ந்து முதல்வரின் வேண்டுகோளுக்கிணங்க திரைப் பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் நிவாரண நிதிகளை அளித்து வருகின்றனர். இந்தநிலையில், கோவை அரசன் சோப் நிறுவனம் முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதியாக 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மின்னணு பரிவர்த்தனை மூலமாக வழங்கியுள்ளனர்.

லட்சங்களில் உதவி செய்யும் நபர்கள் கூட முதல்வர் ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்து பணம் கொடுக்கிறார்கள். அவர்களில் சிலர் முதலமைச்சருடன் சேர்ந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வருகிறது. ஆனால் அரசன் சோப் உரிமையாளர் சத்தமே இல்லாமல் அமைதியாக இவ்வளவு பெரிய தொகையை உதவியாக கொடுத்துள்ளார். பலரும் அரசன் சோப் நிறுவனத்தை பாராட்டி வருகின்றனர்.