வேட்டையன் படம் ஓடிய திரையரங்கில் காலாவதியான பாப்கார்ன்; ரஜினி ரசிகர்கள் ஆவேசம்.!
அவன் வந்துட்டான், இனி இப்படியானவர்கள் எல்லோரும் இருக்கமாட்டீங்க - அன்னபூரணி அரசு அம்மா அதிர்ச்சி பேச்சு..!
தன்னை அருள்வாக்கு சித்தர்போல பாவித்து மக்களிடையே உலாவி வரும் அன்னபூரணி வெளியிட்டுள்ள வீடியோ மீண்டும் வைரலாகியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் ராஜா தோப்பு பகுதியில் தன்னை இறைசக்தி என கூறி மக்களின் பிரச்சனையை தீர்த்து வைப்பதாக வீடியோ வெளியிட்டு வருபவர் அன்னபூரணி அரசு அம்மா. இவர் சமீபத்தில் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் போலிகளை ஒழிக்க அவதாரம் என குறிப்பிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், "சமுதாயம் மக்களுக்கு நல்லது செய்ய வந்த ஆன்மீகவாதிகள் விஷம் வைத்து கொல்லக்கூடியது. மக்களுக்கு இறைநிலையை உணர்த்தி, கொண்டாட்டத்தோடு வாழ வைக்க வந்தவர்களை அழிக்கக்கூடிய சமுதாயம் இது. ஆணாதிக்கம் நிறைந்த சமுதாயம் இது.
பெண்களுக்கு பெண்கள் போட்டி, பொறாமை, வன்மம், வக்கிரம் உடையவர்களுடன் இருக்கிறார்கள். அவர்கள் ஆணாதிக்க சமுதாயமாகத்தான் இருக்க வேண்டும். ஆசிரமம் என்ற பெயரில் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்துவது, போதைப்பொருட்களை பயன்படுத்த வைப்பது என இருப்போரை வளர்க்கும் சமுதாயம் இது.
'வேலுமணி அண்ணே..!' சபையில் வைத்து கலாய்த்த உதயநிதி..! குலுங்கி குலுங்கி சிரித்த முதல்வர்
Posted by Behindwoods on Tuesday, 11 April 2023
இனி இவற்றுக்கு வாய்ப்பு இல்லை. உங்களுடைய அக்கிரமத்தை, ஆணவத்தை இயற்கை நேரடியாக செயல்பட வந்துவிட்டது. ஆன்மீக பெயரில் போலி வேஷம் போடுவோரை துவம்சம் செய்ய இறை சக்தி நேரடியாக வந்துவிட்டது. ஆணவத்தால் ஆட்டம் போடுவோரை அடக்க ஆண்டவன் நேரடியாக செயல்பட வந்துவிட்டான். இனி போலிகளே இருக்க முடியாது" என கூறினார்.
யார் எப்படி பேசினாலும், இவரின் செய்கைகளை ட்ரோல் கண்டென்ட்டுகளாக உருவாக்கி பல விடியோக்கள் வந்தாலும், அதற்கும் அன்னபூரணி பதிலுரைத்து அவ்வப்போது வீடியோ வெளியிட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.