பிரபல சேனல் பேட்டி எடுக்க தடை போட்ட அன்னபூரணி அரசு அம்மா.. நடந்தது என்ன? பகீர் விளக்கம்..!Annapoorani Arasu Amma Banned Polimer TV to Pressmeet

கானலில் நிறைந்து காணப்படும் நீர்போல திடீரென மக்களிடையே அம்மனாக அருள்பாலித்தனர் அன்னபூரணி அரசு அம்மா. இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் கணவரை கைவிட்டு அரசு என்ற திருமண உறவை மீறிய காதலரை கணவராக கரம்பிடித்து சென்றார். 

கணவரின் மறைவுக்கு பின்னர் தனக்கென ஆசிரமம் தொடங்கிய அன்னபூரணி, தனது கணவர் அரசுவின் பெயரையும் சேர்த்து தன்னை அன்னபூரணி அரசு அம்மாவாக அறிவித்து பல சொற்பொழிவுகளை பக்தர்களிடையே ஆற்றி வருகிறார். இவர் குறித்த பல விடியோக்கள் செய்திகளாக வெளியாகி இருக்கின்றன.

சமீபத்தில் தமிழகத்தின் நம்பர் 1 சேனலில் இருந்து அன்னபூரணிக்கு தொடர்பு கொண்டு செய்தியாளர் செய்தி சேகரித்து அதனை பதிவு செய்தார். இந்த செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அன்னபூரணி அரசு அம்மா, தனது கண்டனத்தை தெரிவித்து இனி தனது ஆசிரமத்தில் அந்த சேனல் தாரர்கள் நுழையவும், தன்னை அந்த சேனலில் பணியாற்றுபவர்கள் பேட்டி எடுக்கவும் தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.