"அணையும் தீபம் பிரகாசமாகத்தான் எரியும்" - அதிமுகவை இகழ்ந்த அண்ணாமலை.!



annamalai-pressmeet-ranipet-07-feb-2024

 

மக்கள் பிரச்சனையை கையில் எடுக்கும் நபருக்கு வெற்றி நிச்சயம் என அண்ணாமலை பேசினார்.

இராணிப்பேட்டையில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, "அணையப்போகும் விளக்கு பிரகாசமாக எரியும். பங்காளி கட்சிகளான திமுக, அதிமுக இரண்டுமே ஒன்று என்பது மக்களுக்கு புரிந்துவிட்டது. 

தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பு ஊழல் குறித்து பேசிவிட்டு, மக்களை பரபரப்பில் வைத்து ஏமாற்றுவதை மக்கள் உணர்த்துவிட்டனர். இனியும் அவர்கள் ஏமாறப்போவதில்லை.

tamilnadu

நான் ஆதாரத்தின் பெயரில் பேசி வருகிறேன். மக்கள் பிரச்சனையை கையில் ஈடுபவருக்கு வெற்றி நிச்சயம். 1995ல் கலைஞர் கொண்டு வந்த தொழிற்சாலை காரணமாகவே ராணிப்பேட்டை பகுதியில் பலருக்கும் புற்றுநோய் வருகிறது. 

மக்களின் மீது அக்கறை இல்லாத காரணமாக, அரசால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுற்றுசூழல் குறித்தும், மக்களின் நலன் தொடர்பாகவும் அவர்களுக்கு யோசனை இல்லை" என பேசினார்.