நீண்ட நாட்களுக்கு பிறகு திறக்கப்படும் அங்கன்வாடி மையங்கள்.! குழந்தைகள் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை.!

தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் குறைந்துவரும் நிலையில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கில் பல த


anganvadi open in tamilnadu

தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் குறைந்துவரும் நிலையில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான தியேட்டர்கள் திறக்கப்பட்டன. அதேபோல் தமிழகம் முழுவதும் கடற்கரைகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டன. 

இந்தநிலையில், தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள் வரும் 1 ஆம் தேதி முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அங்கன்வாடி மையத்திற்கு வரும்,  2 முதல் 6-வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்  முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கன்வாடிகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தரமற்ற, காலாவதியான பொருட்களை சுமையலுக்கு பயன்படுத்தக் கூடாது என கூறப்பட்டுள்ளது. வாரத்தில் 6 நாட்களுக்கு காலை 11.30 முதல் 12.30 மணி வரைக்குள் சூடான உணவு வழங்குவது கட்டாயம் என கூறப்பட்டுள்ளது. முட்டைகளை வீடுகளுக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்க கூடாது.

அங்கன்வாடி பணியாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கொரோனா அறிகுறிகள் இருந்தால் மையத்திற்கு வருவதை பணியாளர்கள் தவிர்க்க வேண்டும். வளாகங்கள், சமையறை உள்ளிட்டவற்றை தூய்மைபடுத்திய பின்பே பயன்படுத்த வேண்டும். அங்கன்வாடி பணியாளர்கள், விரல் நகங்களில் நகப்பூச்சு, செயற்கை நகங்கள், ஏதும் பயன்படுத்தக் கூடாது. அனைத்து அங்கன்வாடி ஊழியர்களும் 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். இவ்வாறு வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.